அந்தமான் நிகோபார் தலைநகர் போர்ட் பிளேயர் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம் - மத்திய அரசு அறிவிப்பு

அந்தமான் நிகோபார் தலைநகர் போர்ட் பிளேயர் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது
அந்தமான் நிகோபார் தலைநகர் போர்ட் பிளேயர் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம் - மத்திய அரசு அறிவிப்பு
Published on

டெல்லி,

வங்காள விரிகுடா கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுக்கூட்டம் அந்தமான் நிகோபார் தீவுகள். இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகராக போர்ட் பிளேயர் உள்ளது.

இந்நிலையில், தலைநகர் போர்ட் பிளேயரின் பெயரை மாற்றி மத்திய அரசு அறிவித்துள்ளது. போர்ட் பிளேயரின் பெயரை ஸ்ரீ விஜயபுரம் என்று மாற்றி மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை உள்துறை மந்திரி அமித்ஷா இன்று வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், காலனி ஆதிக்க (ஆங்கிலேய ஆட்சியின்) முத்திரைகளில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் உத்வேகம் பெற்று போர்ட் பிளேயர் பெயரை ஸ்ரீ விஜயபுரம் என பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம். சோழ பேரரசின் கடற்படை தளமாக செயல்பட்ட அந்தமான் நிகோபார் தீவுகள் நாட்டின் சுதந்திர போராட்ட வரலாற்றில் ஈடுஇணையற்ற இடம்பிடித்துள்ளது. தற்போது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய தளமாகவும் திகழ்கிறது' என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com