திருமண பதிவை கட்டாயப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது; சட்ட மந்திரி தகவல்

பெண்கள் வன்கொடுமையை தடுப்பதற்காக திருமண பதிவை கட்டாயப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என சட்ட மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
திருமண பதிவை கட்டாயப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது; சட்ட மந்திரி தகவல்
Published on

மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த அவர், திருமணம் மற்றும் பராமரிப்பு வழக்குகளில் சான்று அடிப்படையில் முக்கியத்துவம் அளிப்பதற்கும் மற்றும் பெண்கள் மீது நடைபெறும் தேவையில்லாத வன்கொடுமைகளை தடுப்பதற்காகவும் திருமண பதிவை கட்டாயப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.

மதரீதியில் இல்லாமல் அனைத்து குடிமக்களுக்கும் திருமண பதிவு கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என கடந்த 2006ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் தெரிவித்திருந்த விசயத்தினை சுட்டி காட்டி பிரசாத் பேசினார்.

திருமண பதிவுகள் இல்லாத நிலையில் மனைவி என்ற அந்தஸ்து பெண்களுக்கு மறுக்கப்படும் சூழல் உள்ளது. அதனால், திருமண முறைகேடுகளை தடுக்க மற்றும் பெண்களை பாதுகாக்க கட்டாய திருமண பதிவு உதவும் என சமீபத்தில் அரசிடம் சட்ட ஆணையம் தெரிவித்திருந்தது.

கட்டாய திருமண பதிவிற்கான ஒரு பிரிவை, பிறப்பு மற்றும் இறப்பு சட்ட பதிவு 1969ல் சேர்த்து ஒரு சிறிய திருத்தத்தினை செய்து விட்டால் போதும் என்றும் அந்த ஆணையம் தெரிவித்திருந்தது.

அதற்காக திருமணத்துடன் தொடர்புடைய தனிச்சட்டங்களை திருத்த வேண்டிய அவசியமில்லை என்பதனையும் தெளிவுபடுத்தியிருந்தது.

அதேவேளையில், ஆதார் அட்டையை அதனுடன் இணைப்பதற்கான திட்டம் எதுவுமில்லை என்றும் அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com