

புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகியோர், சுப்ரீம் கோர்ட்டில் நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை, ஜனநாயகம் இல்லை என கூட்டாக பேட்டியளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைப்பது என்பது இந்திய வரலாற்றிலே இது முதல்முறையாகும். பத்திரிக்கையாளர்களை நீதிபதிகள் சந்தித்த விவகாரத்தில் மத்திய அரசு தன்னை விலக்கிக்கொள்கிறது என செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விவகாரத்தில் அரசு தலையிடாது என மத்திய மந்திரி பிபி சவுத்ரி கூறிஉள்ளார். மத்திய சட்டத்துறை இணை மந்திரி பிபி சவுத்ரி பேசுகையில், உலகம் முழுவதும் நம்முடைய நீதித்துறை மதிக்கப்படுகிறது, அதனுடைய சுதந்திரத்திற்கு, நீதித்துறை அதனுடையை பிரச்சனையை சரிசெய்துக் கொள்ள வேண்டும், என்றார். நீதிபதிகள் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது என்பது அரசு தரப்பில் விளக்கப்பட்டுவிட்டது.