விஐபிகள் பயணம் ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு ரூ.1,146 கோடி கட்டண பாக்கி செலுத்த வேண்டும்

விஐபிகள் பயணத்துக்காக ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு ரூ. 1,146 கோடி கட்டண பாக்கி செலுத்த வேண்டும் என்று தெரியவந்துள்ளது.
விஐபிகள் பயணம் ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு ரூ.1,146 கோடி கட்டண பாக்கி செலுத்த வேண்டும்
Published on

புதுடெல்லி,

முன்னாள் ராணுவ அதிகாரி லோகேஷ் பத்ரா தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு ஏர்இந்தியா பதிலளித்துள்ளது.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுக்கு பாதுகாப்பு கருதி தனி விமானங்களில் பயணம் செய்கிறார்கள். இவ்வகையான பயணத்துக்கு ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு ரூ. 1,146 கோடி கட்டண பாக்கி செலுத்த வேண்டும் என்று தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் ரூ.211.17 கோடி, மத்திய மந்திரிசபை செயலகமும், பிரதமர் அலுவலகமும் ரூ.543.18 கோடி, வெளியுறவுத்துறை அமைச்சகம் ரூ.392.33 கோடி பாக்கி வைத்துள்ளதாக பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு சிஏஜி அறிக்கையிலும் மத்திய அரசு விமான கட்டண பாக்கி வைத்துள்ள பிரச்சினை குறிப்பிட்டு காட்டப்பட்டது. ஏற்கனவே

நஷ்டத்தில் இயங்குகிற பொதுத்துறை நிறுவனத்துக்கு மத்திய அரசே ரூ.1,146 கோடி பாக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com