தனிநபர் தரவுகளை தவறாக பயன்படுத்தினால் ரூ.500 கோடி அபராதம் - மத்திய அரசின் புதிய மசோதாவில் தகவல்

தனிநபர் தரவுகளை தவறாக பயன்படுத்தினால் ரூ.500 கோடி அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசின் புதிய மசோதாவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

கடந்த ஆகஸ்டு மாதம் தரவு பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெற்றது. அதற்கு பதிலாக, மின்னணு தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா-2022-ஐ உருவாக்கி உள்ளது.

இந்த வரைவு மசோதாவின் உட்பிரிவுகளில், தனிநபர்களின் மின்னணு தரவுகளை பாதுகாப்பதற்கான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த தரவுகள், சட்டரீதியான காரணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

சட்டவிரோத காரியங்களுக்கு பயன்படுத்தப்பட்டால், ரூ.500 கோடிவரை அபராதம் விதிக்கப்படும் என்று வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட வரைவு தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவில், அபராத தொகை ரூ.15 கோடியாக இருந்தது. அத்தொகை ரூ.500 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com