இந்தியா 2032 ஆம் ஆண்டில் ஒலிம்பிக்ஸ் நடத்த முயல்கிறது - தமிழக ஒலிம்பிக் சங்க நிர்வாகி

தமிழக ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் என் ராமச்சந்திரன் இந்திய அரசானது 2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக்சை நடத்த முயற்சி செய்ய ஒப்புக்கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்தியா 2032 ஆம் ஆண்டில் ஒலிம்பிக்ஸ் நடத்த முயல்கிறது - தமிழக ஒலிம்பிக் சங்க நிர்வாகி
Published on

புதுடெல்லி

சென்னையில் தமிழக ஒலிம்பிக் சங்கம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய அரசு கொள்கை அளவில் 2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக்சில் கலந்து கொள்ளும் சாத்தியக்கூறுகளை ஆராய ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் அது ஆரம்ப நிலையிலேயே உள்ளது. நமக்கு அனைத்து ஒப்புதல்களும் கிடைக்க வேண்டியுள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்கம் வரைவு திட்டத்தைத் தயாரித்து அரசிற்கு வழங்க வேண்டும். அதை அரசு ஒப்புக்கொள்ள வேண்டும். அரசு உறுதிமொழி ஒன்றையும் வழங்க வேண்டும். நடப்பு அரசிடமிருந்து மட்டுமல்ல; எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்தும் கூடப் பெற வேண்டும்.

அதுமட்டுமின்றி போட்டிகளை நடத்தும் நகரம் அமைந்துள்ள மாநிலத்தின் முதல்வரிடமிருந்தும் பெற வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆறிலிருந்து எட்டு ஆண்டுகள் ஆகும். அதை எளிதாக செய்ய முடியும். போட்டி நடத்த இன்றைய விலையில் 12 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு செலவாகும். இதில் பாதி வருவாயகவும், மீதம் இந்திய ஒலிம்பிக் சங்கமும் தரும் என்றார் ராமச்சந்திரன். இவர் கடந்த மாதம் 27 ஆம் தேதி தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com