விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவங்களில் 13 பேர் கைது - மத்திய அரசு தகவல்


விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவங்களில்  13 பேர் கைது - மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 3 Feb 2025 11:59 PM IST (Updated: 4 Feb 2025 3:23 PM IST)
t-max-icont-min-icon

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லி,

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் கடந்த ஆண்டு நாடு முழுவதும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்துத் துறை மந்திரி முரளிதர் பதில் அளித்துள்ளார். மாநிலங்களவையில் அவர் கூறியதாவது,

2024ம் ஆண்டு ஒட்டுமொத்தமாக விமானங்களுக்கு 728 வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் வந்துள்ளன. இதில், 714 மிரட்டல்கள் உள்ளூர் விமானங்களுக்கு வந்துள்ளன. அதிகபட்சமாக இண்டிகோ விமானங்களுக்கு 216 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்' என்றார்.

1 More update

Next Story