வாக்குறுதி நிறைவேற்றிய விவரத்தை வெளியிடுங்கள் - மத்திய, மாநில அரசுகளுக்கு மாயாவதி யோசனை

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று வாக்குறுதி நிறைவேற்றிய விவரத்தை வெளியிடுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு மாயாவதி யோசனை தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லக்னோ,

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மத்திய, மாநில அரசுகள் இந்தியாவை 'உலகின் குரு' ஆக உயர்த்த தொடர்ந்து பாடுபட வேண்டும். அதற்காக ஒவ்வொரு குடியரசு தின நாளிலும் மத்திய, மாநில அரசுகள், தங்களைத்தாங்களே மதிப்பீடு செய்து கொண்டு, வாக்குறுதிகளை எந்த அளவுக்கு நிறைவேற்றி இருக்கிறோம் என்பது குறித்து ஒரு வளர்ச்சி அறிக்கை வெளியிட வேண்டும். இந்த செயல், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும். அத்துடன், குடியரசு தினம் வெறும் சம்பிரதாய விழாவாக இல்லாமல் நடப்பதை உறுதி செய்யும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com