மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்க காங்கிரஸ் முயற்சி; பிரதமர் மோடி குற்றச்சாட்டு

அசாமில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்க காங்கிரஸ் முயற்சி; பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Published on

கவுகாத்தி,

அசாம், மேற்கு வங்காளம், புதுச்சேரி, தமிழகம், கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் 2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி நேற்று அசாம் சென்றார். பயணத்தின் 2வது நாளான இன்று பிரதமர் மோடி அசாமின் சில்சார் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் 23 ஆயிரத்து 550 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

இதனை தொடந்து பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது,

வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் பல ஆண்டுகளாக புறக்கணித்தது. உலகின் பல்வேறு பகுதிகளில் போர்கள் நடந்து வரும் நிலையில் அந்த போர்களால் நாட்டு மக்கள் பாதிக்கப்படுவதை குறைக்க நாங்கள் முயற்சி எடுத்துவருகிறோம்.

ஒரு அரசியல் கட்சியாக இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அதன் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் அதில் தோல்வியடைந்துவிட்டது. மக்கள் மத்தியில் காங்கிரஸ் பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறது. அசாமின் முன்னேற்றத்திற்கான எதிர்கால திட்டங்கள் காங்கிரசிடம் எதுவும் இல்லை. அதற்கு மாறாக என்னைப்பற்றி பொய்கள், அவதூறுகள், அவமதிப்புகள் செய்து மக்களை திசைதிருப்பவே காங்கிரஸ் முயல்கிறது

என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com