அயோத்தி ராமர் கோவிலின் முதலாம் ஆண்டு நிறைவு நாள் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அயோத்தி ராமர் கோவில் பல நூற்றாண்டு கால தியாகம் மற்றும் போராட்டத்தின் மூலம் கட்டப்பட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவிலின் முதலாம் ஆண்டு நிறைவு நாள் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி,

அயோத்தியில் ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "அயோத்தியில் குழந்தை ராமரின் சிலை பிரதிஷ்டையின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். பல நூற்றாண்டு கால தியாகம், தவம் மற்றும் போராட்டத்தின் மூலம் கட்டப்பட்ட இந்த கோவில், நமது கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தின் ஒரு சிறந்த பாரம்பரியமாகும். வளர்ந்த இந்தியா என்ற தீர்மானத்தை அடைவதற்கு இந்த தெய்வீக மற்றும் பிரமாண்டமான ராமர் கோவில் ஒரு சிறந்த உத்வேகமாக மாறும் என்று நான் நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com