

புதுடெல்லி,
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 1999-ம் ஆண்டு காஷ்மீரில் உள்ள இந்தியாவின் கார்கில் மலைப்குதியை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது.
அதனை மீட்க இந்தியப் படைகள் தாக்குதல் நடத்திய போது இருநாடுகளுக்கும் இடையே கார்கில் பகுதியில் போர் நடைபெற்றது. 90 நாட்கள் நடந்த இந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதற்காக இந்திய வீரர்கள் பலர் தங்களது இன்னுயிரை தியாகம் செய்தனர்.
கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் உயிர் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொறு ஆண்டும் ஜூலை மாதம் 26-ந்தேதி கார்கில் போர் வெற்றி தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன் படி இன்று கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், ராணுவ வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்தால் நாடு பாதுகாப்பாக உள்ளதை நினைவு கூற வேண்டும். மக்களின் பாதுகாப்பு நாட்டுக்காக துணிச்சலுடன் போரிட்டவர்களை நினைவு கூறுங்கள் என்று கூறியுள்ளார்.
நாடு முழுவதும் இன்று பல இடங்களில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
டெல்லி இந்தியா கேட் பகுதயில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் ராணுவ மந்திரி பொறுப்பு வகிக்கும் அருண்ஜெட்லி, முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.