காஷ்மீரில் கையெறி குண்டு வீச்சு; போலீஸ் அதிகாரி உள்பட 2 பேர் காயம்

காஷ்மீரில் போலீசாரின் ரோந்து வாகனம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 2 பேர் காயமடைந்தனர்.
காஷ்மீரில் கையெறி குண்டு வீச்சு; போலீஸ் அதிகாரி உள்பட 2 பேர் காயம்
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் சரப் கடால் பகுதியில் போலீசாரின் ரோந்து வாகனம் ஒன்றின் மீது நேற்று (ஞாயிறு) மாலை 6.40 மணியளவில் பயங்கரவாதிகள் திடீரென பதுங்கி இருந்து துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில், மெஹ்ராஜ் அகமது என்ற போலீஸ் அதிகாரி மற்றும் சர்தாஜ் அகமது பட் என்ற குடிமக்களில் ஒருவர் என 2 பேர் காயமடைந்து உள்ளனர். அவரகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்து சம்பவம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com