புற்றுநோய் சிகிச்சை நிபுணராக விரும்புகிறேன் - நீட் மறுதேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்

நீட் மறுதேர்வில் மொத்தம் 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புற்றுநோய் சிகிச்சை நிபுணராக விரும்புகிறேன் - நீட் மறுதேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்
Published on

புதுடெல்லி,

2026-ம் ஆண்டுக்கான நீட் மறுதேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. இந்த தேர்வில் மொத்தம் 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகளில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த ஆர்யன் குப்தா மற்றும் அரியானாவைச் சேர்ந்த பன்ஷுல் பன்சால் ஆகியோர் 720-க்கு 715 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பகிர்ந்து கொண்டனர்.

புற்றுநோய் சிகிச்சை நிபுணர்

முதலிடம் பிடித்த ஆர்யன் குப்தாவின் பெற்றோர் இருவரும் டாக்டர்கள். 'எனது வெற்றியால் பெற்றோர் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தனது வெற்றிக்கு பெற்றோரின் ஆதரவே காரணம்' என்கிறார். தொடர்ந்து அவர் கூறியதாவது:- "தேர்வுக்காக தினமும் 16 முதல் 17 மணி நேரம் வரை படித்தேன். சில நாட்களில் தூக்கத்தையே தியாகம் செய்திருக்கிறேன். நான் புற்றுநோய் சிகிச்சை நிபுணராக விரும்புகிறேன்.

வாழ்த்து

ஏனென்றால் நான் மூன்றாம் வகுப்பு படித்தபோது என் பாட்டி புற்றுநோயால் உயிரிழந்தார். அன்றே இந்தத் துறையில் பணியாற்ற வேண்டும் என்று உறுதியெடுத்தேன். வாழ்க்கையில் செய்ய வேண்டியவை ஏராளம் உள்ளது. இப்போதைக்கு நான் உணர்வது என்னவென்றால் எனது வெற்றி பெற்றோர். ஆசிரியர்கள் மற்றும் தன்னை நம்பிய அனைவருக்கும் சொந்தமானது. இவ்வாறு அவர் கூறினார்.ஆர்யன் குப்தாவின் வெற்றியை அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். பஞ்சாப் மாநில அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com