ரூ. 30 கடனை திருப்பி கேட்டதற்காக கடைக்காரர் அடித்து கொலை..!

ரூ. 30 கடனை திருப்பிக் கேட்டதற்காக 3 பேர் கட்டையால் தாக்கி கடைக்காரரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

பிஜ்னூர்,

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டத்தில் ரூ. 30 கடனை திருப்பிக் கேட்டதற்காக 3 பேர் கட்டையால் தாக்கி கடைக்காரரை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷிவாலா கலான் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தாண்டா டாக்கி கிராமத்தில் யஷ்பால் (வயது 50) என்பவர் மளிகைக் கடை வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு யஷ்பால் முன்பு கடனாக கொடுத்த ரூ. 30 திருப்பி கேட்டதற்காக பூபேந்திரா, அவரது சகோதரர் யோகேந்திரா மற்றும் ஆஷி ஆகியோர் கட்டையால் யஷ்பாலை தாக்கினர்.

இதையடுத்து அருகிலிருந்த சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட யஷ்பால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராம் அர்ஜ், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com