மளிகை கடைக்காரருக்கு வந்த ரூ.141 கோடி வருமான வரி நோட்டீஸ்


மளிகை கடைக்காரருக்கு வந்த ரூ.141 கோடி வருமான வரி நோட்டீஸ்
x

ஜூலை மாதம் கடையில் ₹141¼ கோடிக்கு விற்பனை செய்ததாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

புலந்த்சாகர்,

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் குர்ஜாவின் நயாகஞ்ச் பகுதியில் சுதிர் என்பவர் வீட்டுடன் வைத்து சிறிய மளிகைக்கடை நடத்தி வருகிறார். அவருக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் அவரது கடையில் ₹141¼ கோடிக்கு விற்பனை செய்ததாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.இதை பார்த்து சுதிர் அதிர்ச்சி அடைந்தார். இதை தொடர்ந்து அவர் குர்ஜா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து சுதிர் கூறும்போது, “டெல்லியில் 6 நிறுவனங்களை நிறுவ எனது பான் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. 2022-ம் ஆண்டும் தனக்கு இது போல் ஒரு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன் பிறகு அந்த நிறுவனங்களுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று வருமானவரி அதிகாரிகளிடம் விளக்கினேன். தற்போது மீண்டும் நோட்டீஸ் வந்துள்ளது” என்றார்.

1 More update

Next Story