கனமழையால் வெள்ளம்.. மணமகனை தண்ணீரில் தூக்கிச்சென்ற உறவினர்கள் - வீடியோ வைரல்

ஏரி நிரம்பி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நகரி,
தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கண்ணேறுவரம் என்ற இடத்தில் உள்ள ஏரி நிரம்பி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அந்த வழியாக திருமண கோஷ்டி ஒன்று மணமகனுடன் காரில் சென்றது. போக்குவரத்து பாதிப்பால் நடுவழியில் கார் நிறுத்தப்பட்டது. 4 மணி நேரம் காத்திருந்தும் வெள்ளம் வடிந்தபாடில்லை. இதனால் உறவினர்கள் மணமகனை தூக்கிக்கொண்டு ஏரி நீர் வழிந்தோடிய சாலையை கடந்து சென்றனர்.
அதன்பின்னர் மற்றொரு கார் மூலமாக மணமகன் திருமணம் நடைபெற இருந்த மண்டபத்துக்கு சென்றார். அங்கு மணமகள் கழுத்தில் அவர் தாலி கட்டினார். இதுதொடர்பான வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story






