நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்

நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்து உள்ளார்.
நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்
Published on

புதுடெல்லி,

ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்தி காந்த தாஸ் இன்று கூறியதாவது:-

நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது. மந்தநிலையின் அறிகுறிகளுடன் எதிர்பார்த்ததை விட பலவீனமான வளர்ச்சியால் உலகளாவிய நிதி ஸ்திரத்தன்மைக்கு முக்கிய ஆபத்து ஏற்பட்டு உள்ளது இருப்பினும் வங்கிகள் அதனை சரிகட்டுவது அதிக நெகிழ்ச்சியை அளிக்கின்றது.

ரிசர்வ் வங்கி தொடர்ந்து சிறந்த 50 வங்கி சாராத நிதி நிறுவனம் மற்றும் வீட்டுவசதி நிதி நிறுவனங்களை கண்காணித்து வருகிறது, மேலும் இதுபோன்ற நிறுவனங்கள் சரிவதில்லை என்பது உறுதி செய்யப்படும். வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஒன்றோடொன்று இணைந்திருப்பது குறித்து ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது என கூறினார்

பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருந்ததால் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு கொள்கை வட்டி வீதத்தை அல்லது ரெப்போ வீதத்தை 110 அடிப்படை புள்ளிகளாக குறைத்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com