ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவுவதை நேரில் பார்க்க முன்பதிவு தொடக்கம்: இஸ்ரோ அறிவிப்பு

வருகிற 17-ந்தேதி 'இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. எப்.14 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

ஸ்ரீஹரிகோட்டா,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரிக்கும் ராக்கெட்டுகள், செயற்கைகோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 2 ராக்கெட் ஏவுதளங்களில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டினத்தில் 2-வது ஏவதளத்தை இஸ்ரோ அமைத்து வருகிறது.

இந்தநிலையில், மாணவர்கள், ஆர்வலர்கள் ராக்கெட் ஏவுவதை நேரில் பார்வையிட வசதியாக 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய வளாகத்தில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் வந்து பார்வையிட ஆர்வம் உள்ளவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.

அந்தவகையில் வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு வானிலை செயற்கைக்கோளான 'இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. எப்.14 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. இதனை நேரில் பார்வையிட விரும்பும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், இன்று (திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு https://lvg.shar.gov.in என்ற இணையதள முகவரியில் பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com