

பணகுடி,
நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள மகேந்திரகிரியில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு விண்ணில் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜெனிக் என்ஜின் தயார் செய்யப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு தேவையான விகாஸ் என்ஜின் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதற்கான பரிசோதனை இன்று நடந்தது. இதற்காக 240 வினாடிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கவுண்ட்டவுன் தொடங்கியது. இதில் 240 வினாடிகளில் இலக்கை அடைந்து விகாஸ் என்ஜின் பரிசோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.