ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் - மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவிப்பு

ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கி, மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் - மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

ஜி.எஸ்.டி. என்கிற சரக்கு சேவை வரியின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வர்த்தகர்கள் 2017-18-ம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய டிசம்பர் 31-ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது இந்த தேதி மேலும் 3 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதித்துறை அமைச்சகத்தின்கீழ் உள்ள மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜி.எஸ்.டி.ஆர்-9, ஜி.எஸ்.டி.ஆர்-9ஏ, ஜி.எஸ்.டி.ஆர்-9சி ஆகிய விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஜி.எஸ்.டி. வலைதளத்தில் கிடைக்கும் என்று கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com