

புதுடெல்லி,
கடந்த மே மாதம் ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டிய ஜிஎஸ்டி வசூல், ஏப்ரல் மாதம் புதிய உச்சமாக ரூ. 1.41 லட்சம் கோடி வசூலானது.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் ஜிஎஸ்டி ரூ.92,849 கோடி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கடந்த 10 மாதங்களுக்கு பின்னர் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கு கீழ் சென்றுள்ளது. அதேநேரத்தில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் கிடைத்த ஜிஎஸ்டி தொகையை விட இந்த மாதம் 2 சதவீதம் அதிகம் ஆகும்.
இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜூன் மாதம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியில், கொரோனா 2வது அலையில் மத்திய அரசு பல்வேறு வழங்கிய பல்வேறு நிவாரண உதவிகள் காரணமாக, கடந்த ஜூன் முதல் ஜூலை 5 வரை நடந்த பரிமாற்றங்களுக்கு வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியும் அடங்கி உள்ளது.
கடந்த ஜூன் மாதம் வசூலான ஜிஎஸ்டி தொகை ரூ.92,849 கோடியில்,
சிஜிஎஸ்டி- ரூ.16,424 கோடி, எஸ்ஜிஎஸ்டி- ரூ.20,397 கோடி, ஐஜிஎஸ்டி- ரூ.49,079 கோடி (இதில், இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.25,762 கோடியும் அடங்கும்)
செஸ் வரி மூலம் ரூ.6,949 கோடி ( இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.809 கோடியும் அடங்கும்). என்று அதில் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.