ஜூன் மாதம் ரூ1.44 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் - மத்திய நிதி அமைச்சகம்

கடந்த ஜூன் மாதம் ஜிஎஸ்டி 1,44,616 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜூன் மாதம் ரூ1.44 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் - மத்திய நிதி அமைச்சகம்
Published on

புதுடெல்லி,

கடந்த ஜூன் மாதம் ஜிஎஸ்டி 1,44,616 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.இது கடந்த ஆண்டு (2021) ஜூன் மாதம் வசூலான ரூ.92,800 கோடியை விட 56 சதவீதம் அதிகம் ஆகும்.

ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், வசூல் 1.40 லட்சம் கோடியை தாண்டுவது இது 5வது முறையாகும். கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் தொடர்ந்து 4வது முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

ஜூன் மாதம் ஜிஎஸ்டி வசூலான ரூ.1,44,616 கோடியில்,சிஜிஎஸ்டி ரூ.23,306 கோடி எஸ்ஜிஎஸ்டி ரூ.32,406 கோடி ஐஜிஎஸ்டி ரூ.75,887 கோடி( பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.40,102 கோடி உட்பட) செஸ் ரூ.11,018 கோடி( பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.1,197 கோடி உட்பட) அடங்கும்.

ஜூன் மாத வசூலானது, கடந்த ஏப்., மாதம் வசூலான 1,67,540 கோடிக்கு அடுத்து மிகப்பெரிய தொகையாகும். கடந்த மே மாதம் ரூ.1.41 லட்சம் கோடி வசூலாகியிருந்தது. பொருளாதார வளர்ச்சி மற்றும் போலி பில் தயாரித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கை காரணமாக ஜிஎஸ்டி வசூல் உயர்ந்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com