நிர்மலா சீதாராமன் தலைமையில் 22-ந்தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் வரும் 22-ந்தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.
GST Council Meeting chaired by Nirmala Sitharaman
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான புதிய மந்திரி சபையில் மத்திய நிதித்துறை மந்திரியாக நிர்மலா சீதாராமன் கடந்த 9-ந்தேதி பதவியேற்றார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நடைபெற உள்ள முதல் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி டெல்லியில் வரும் 22-ந்தேதி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 53-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் குறித்து கவுன்சில் உறுப்பினர்களிடம் விரைவில் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி மந்திரிகளை உள்ளடக்கிய 52-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கடந்த அக்டோபர் 7-ந்தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com