

புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஜி.எஸ்.டி. சூப்பிரண்டாக இருப்பவர் ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா. இவர் தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டார். ஆனால் சட்டப்படி ஜி.எஸ்.டி. செலுத்தி வருவதால் லஞ்சம் கொடுக்க அவர் மறுத்ததாக தெரிகிறது. ஆனால் ரூ.25 ஆயிரமாவது தருமாறு அதிகாரி வற்புறுத்தியதாக தெரிகிறது.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத தொழில் அதிபர், அதிகாரி பேசிய உரையாடலை தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தார். மேலும் சி.பி.ஐ.யிலும் புகார் செய்தார். இதனையடுத்து லஞ்சம் கேட்ட ராஜேஷ் ஸ்ரீவஸ்தவாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.