

ஜூன் 30-ந் தேதிவரை, இந்த விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பல்வேறு தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள், நிவாரண பணியில் ஈடுபடும் கார்ப்பரேட் அமைப்புகள் ஆகியவற்றின் கோரிக்கையை ஏற்று ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரத்து செய்யப்படுவதாக கூறியுள்ளது.
அதன்படி, இந்தியாவில் இலவசமாக கொரோனா நிவாரண பொருட்களை வினியோகம் செய்ய அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள், சட்டரீதியான அமைப்புகள் மற்றும் மாநில அரசுகள் இந்த பொருட்களை ஜி.எஸ்.டி. செலுத்தாமல் இலவசமாக இறக்குமதி செய்யலாம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.