முன்னாள் முதல்-மந்திரி வீட்டின் முன்பு காவலாளி வெட்டி கொலை

முன்னாள் முதல்-மந்திரி வீட்டின் அருகே காவலாளி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்-மந்திரி வீட்டின் முன்பு காவலாளி வெட்டி கொலை
Published on

ஆர்.டி.நகர்:-

பெங்களூரு ஆர்.டி.நகர் பகுதியில் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வீடு உள்ளது. அவரது வீட்டின் அருகே எம்.எல்.ஏ. அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் இரவு நேர காவலாளியாக இருதயராஜன் என்பவர் இருக்கிறார். இவர் 3 நாட்களுக்கு முன்பு இரவு பணியில் இருந்தார். அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். அவரை பிடித்து காவலாளி விசாரித்தார். அப்போது திடீரென அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு காவலாளி முகத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் காவலாளியின் முகத்தில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் கத்தி கூச்சலிட்டபோது, அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் வாலிபர் தப்பி சென்றார்.

இதுகுறித்து ஆர்.டி.நகர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சந்தேகத்தின்பேரில் போலீசார் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் தவுபீக் (வயது 22) என்பது தெரிந்தது. மேலும் அவர் தான் சம்பவத்தன்று காவலாளி மீது தாக்குதல் நடத்தியதும், இரவு நேரங்களில் திருட்டில் ஈடுபட்டு வரும் அவர் கடந்த வாரம் மற்றொரு காவலாளியை தாக்கி இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com