

திருவனந்தபுரம்,
கேரளாவின் கண்ணூர் நகரில் பர்னிச்சர் கடைக்கான குடோன் ஒன்று உள்ளது. இந்த கடையில் இன்று திடீரென தீப்பிடித்து உள்ளது. இதனால் வான்வரை புகையானது எழும்பி பறந்தது.
இந்த தீயானது அடுத்தடுத்து அருகேயிருந்த மற்ற கடைகளுக்கும் பரவியுள்ளது. இதுபற்றிய தகவல் தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் பற்றி தெரிய வரவில்லை. இந்த தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை என முதல் கட்ட தகவல் வெளிவந்துள்ளது.