

புதுடெல்லி,
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் மத்திய அரசு அதிகாரிகளின் வீடுகளில் கடந்த சில நாட்களாக சி.பி.ஐ. தீவிர சோதனை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் கிழக்கு டெல்லியில் உள்ள இந்திய வர்த்தக போட்டிகள் தொடர்பான ஆணையத்தின்(சி.சி.ஐ.) துணை டைரக்டர் ஜெனரல் ரவிச்சந்திரன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
இவர் 201315ம் ஆண்டுகளிடையே சென்னையில் உள்ள மத்திய கலால் புலனாய்வு இயக்குனரகத்தில் மூத்த அதிகாரியாக பணியாற்றியவர் ஆவார்.
ரவிச்சந்திரனுக்கு, குட்கா ஊழல் வழக்கில் தொடர்பிருப்பதாக தகவல் தெரிய வந்ததையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.