அந்தமானில் கடலுக்கடியில் மிகப்பெரிய தேசியக்கொடி ஏற்றி கின்னஸ் சாதனை

அந்தமான் அரசு சார்பில் ராதாநகர் கடற்பகுதியில் நீருக்கடியில் அமைக்கப்பட்ட ஒரு மேடையில் 60 மீட்டர் நீளம், 40 மீட்டர் அகலம் கொண்ட தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
அந்தமானில் கடலுக்கடியில் மிகப்பெரிய தேசியக்கொடி ஏற்றி கின்னஸ் சாதனை
Published on

ஸ்ரீவிஜயபுரம்,

அந்தமான் அரசு கடலுக்கடியில் மிகப்பெரிய தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வை நேற்று நடத்தியது. அதன்படி அங்குள்ள ராதாநகர் கடற்பகுதியில் நீருக்கடியில் அமைக்கப்பட்ட ஒரு மேடையில் 60 மீட்டர் நீளம், 40 மீட்டர் அகலம் கொண்ட தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

காலை 10.35 மணியளவில் நடந்த இந்த நிகழ்வை அந்தமான்-நிகோபார் போலீஸ், வனத்துறை, கடற்படை, கடலோர காவல்படை மற்றும் பல்வேறு மையங்களில் இருந்து வந்த ஸ்கூபா பயிற்சி பெற்றவர்கள் இணைந்து நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் துணைநிலை கவர்னர் ஜோஷி, தலைமை செயலாளர் சந்திரபூஷன் குமார் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. தாலிவால் ஆகியோர் நேரில் பங்கேற்றனர்.

மேலும் கின்னஸ் சாதனை புத்தக நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி நேரில் பார்வையிட்டு அதை சாதனையாக பதிவு செய்து கொண்டார். அதற்கான சான்றிதழையும் அந்தமான்-நிகோபார் அரசிடம் வழங்கினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com