குஜராத்: சரக்கு ரெயிலின் 16 பெட்டிகள் தடம் புரண்டன

குஜராத்தில் சரக்கு ரெயிலின் 16 பெட்டிகள் தடம் புரண்டதில் ரெயில் போக்குவரத்து இன்று நண்பகல் 12 மணிவரை நிறுத்தப்பட்டு உள்ளது.
குஜராத்: சரக்கு ரெயிலின் 16 பெட்டிகள் தடம் புரண்டன
Published on

தகோத்,

குஜராத்தின் தகோத் மாவட்டத்தில் உள்ள மங்கள் மகுடி ரெயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 1 மணியளவில் சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த ரெயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. ரத்லம்-மும்பைக்கு இடைப்பட்ட பகுதியில் ரெயிலின் 16 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. ரெயிலின் மீது செல்லும் மின் கம்பிகளும் உடைந்துள்ளன.

இதனால் ரத்லம் முதல் மும்பை வரையிலான இரு பகுதியிலும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. ரெயில் சேவை இன்று நண்பகல் 12 மணிவரை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், பெரிய விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டு உள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் குஜராத்துக்கு இடைப்பட்ட ரத்லம் ரெயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் ரெயில் தடம் புரள்வது, 3 நாளில் ஏற்படும் 2வது சம்பவம் ஆகும்.

கடந்த 3 நாட்களுக்கு முன் ரத்லம் ரெயில் நிலையத்தில் வீர்பூமி எக்ஸ்பிரசின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. இதன்பின்னர் அனைத்து ரெயில்வே பணியாளர்களும் சம்பவ பகுதிக்கு சென்று பணியில் ஈடுபட்டனர். ஒன்றரை மணிநேரத்திற்கு பின்னர் பெட்டிகள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com