குஜராத்: திருமண விருந்து சாப்பிட்ட 60 பேருக்கு வாந்தி, பேதி

சிகிச்சை பெற்று வரும் அனைவரும் உடல் நலத்துடன் உள்ளனர் என டாக்டர் கூறியுள்ளார்.
குஜராத்:  திருமண விருந்து சாப்பிட்ட 60 பேருக்கு வாந்தி, பேதி
Published on

தஹோத்

குஜராத்தின் தஹோத் மாவட்டத்தில் திருமண விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் 400 பேர் வரை கலந்து கொண்டனர். திருமணத்தில் பங்கேற்றவர்கள் விருந்து சாப்பிட்டு விட்டு, மணமக்களை வாழ்த்தி விட்டு அவரவருடைய வீடுகளுக்கு சென்றனர்.

எனினும், இரவு 11 மணியளவில் அவர்களில் சிலருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உள்ளது. திருமண விருந்து சாப்பிட்டவர்களில் 50 பேர் முதல் 60 பேர் வரை வாந்தியும், பேதியும் ஏற்பட்டு உள்ளது. இதனால், உடனடியாக அவர்கள் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

ஏறக்குறைய 150 முதல் 200 பேர் வரை சிகிச்சைக்கு வரக்கூடும் என கிடைத்த தகவலின் அடிப்படையில், அதற்கேற்ப படுக்கை மற்றும் அவசரகால சேவைக்கான வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. சிகிச்சை பெற்று வரும் அனைவரும் உடல் நலத்துடன் உள்ளனர் என டாக்டர் கூறியுள்ளார். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com