குஜராத்: லாரி-வாகனம் மோதலில் 7 பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்

காவ்டா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விபத்துக்கான காரணம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.

குஜராத்:  லாரி-வாகனம் மோதலில் 7 பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்
Published on: 

கட்ச்

குஜராத்தில் லாரி மற்றும் வாகனம் ஒன்று மோதி கொண்டதில் 7 பேர் பலியானார்கள்.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் காவ்டா அருகே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவுக்குள் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அதன் எதிர்திசையில், ஒரு 'பிக்-அப்' வாகனம் வந்து கொண்டிருந்தது. அதில், 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த சம்பவம் பற்றி காவ்டா காவல் நிலைய துணை ஆய்வாளர் சாவ்டா கூறும்போது, விபத்தில், 'பிக்-அப்' வாகனம் உருக்குலைந்தது. அதில் இருந்த 7 தொழிலாளர்கள், வாகனத்துக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

பிரதமர் இரங்கல்

வாகனத்தில் சிக்கிய தொழிலாளர்களின் உடல்கள் கிரேன் மூலம் மீட்கப்பட்டன. 20 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர் என்றார். சம்பவம் பற்றி காவ்டா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விபத்துக்கான காரணம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என வேண்டி கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com