திருமணமாகி 45 ஆண்டுகளுக்கு பிறகு 70 வயதில் குழந்தை பெற்ற பாட்டி

வயதான நிலையிலும் குழந்தையைப் பெற்ற தம்பதிகளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திருமணமாகி 45 ஆண்டுகளுக்கு பிறகு 70 வயதில் குழந்தை பெற்ற பாட்டி
Published on

அகமதாபாத்

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் மோடா கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதிகள் ஜிவுன்பென் ரபாரி(வயது 70) - வல்ஜிபாய் ரபாரி(வயது 75) . இந்த தம்பதிக்கு திருமணமாகி 45 ஆண்டுகளாக குழந்தை இல்லை.

உறவினர்கள் மூலம் ஐவிஎப் எனும் நவீன செயல்முறை பற்றி அறிந்த பிறகு வயதானபிறகும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பி அவர்கள் இருவரும் ஐவிஎப் மையத்தை நடத்தும் டாக்டர் நரேஷ் பானுஷாலியை அணுகினர்.

இந்த நிலையில்,விட்ரோ கருத்தரித்தல்(ஐவிஎப்)மூலமாக அவர் ஆண் குழந்தையைப் பெற்றுள்ளார். வயதான நிலையிலும் குழந்தையைப் பெற்ற அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.மேலும், குழந்தையுடன் அவர்கள் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

இதற்கு முன்னதாக,2019 ஆம் ஆண்டில்,ஆந்திராவைச் சேர்ந்த 74 வயதான மங்கையம்மா என்பவர் ஒரு நன்கொடையாளரின் உதவியுடன் ஐவிஎப் சிகிச்சைக்கு பின்னர் இரட்டை பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com