எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 55 இந்திய மீனவர்களை சிறைபிடித்தது பாகிஸ்தான் கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 55 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை சிறைபிடித்துள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 55 இந்திய மீனவர்களை சிறைபிடித்தது பாகிஸ்தான் கடற்படை
Published on

இஸ்லமபாத்,

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் சர்வதேச கடல் எல்லை அமைந்துள்ளது. இந்த எல்லையை தாண்டி மீன்பிடிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் சர்வதேச எல்லையில் நேற்று இரவு இந்திய மீனவர்கள் பலர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு ரோந்து வந்த பாகிஸ்தான் கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறி 55 மீனவர்களை சிறைபிடித்தனர். மேலும், அவர்களுடன் 9 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com