குஜராத்: பா.ஜ.க. முன்னாள் மந்திரி கட்சியில் இருந்து விலகல்

குஜராத்தில் 32 ஆண்டுகள் பா.ஜ.க.வில் இருந்த முன்னாள் மந்திரி ஜெய் நாராயண் வியாஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளார்.
குஜராத்: பா.ஜ.க. முன்னாள் மந்திரி கட்சியில் இருந்து விலகல்
Published on

வதோதரா,

குஜராத்தில் ஆளும் கட்சியாக பா.ஜ.க. இருந்து வருகிறது. தொடர்ந்து நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தலை குஜராத் எதிர்கொள்கிறது. இந்த சூழலில், அக்கட்சியில் 32 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஜெய் நாராயண் வியாஸ் பா.ஜ.க.வில் இருந்து விலகி உள்ளார்.

முன்னாள் மந்திரி மற்றும் மூத்த பா.ஜ.க. தலைவரான வியாஸ் தனது பதவி விலகல் கடிதத்தினை மாநில பா.ஜ.க. தலைவருக்கு அனுப்பி விட்டேன் என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

அடுத்த மாதம், குஜராத் சட்டசபை தேர்தலில் சித்பூர் தொகுதியில் இருந்து போட்டியிட முடிவு செய்துள்ளேன் என்றும் வியாஸ் கூறியுள்ளார். எனினும் சுயேச்சையாக அவர் போட்டியிடவில்லை.

அவர், தனது ஆதரவாளர்களை கலந்து ஆலோசித்து எந்த கட்சி என்பது பற்றி முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார். படான் மாவட்ட பா.ஜ.க. கமிட்டியின் பணிகள் மகிழ்ச்சி அளிக்கவில்லை என கூறிய அவர், தொடர்ந்து ஏமாற்றத்திற்கு ஆளானேன் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com