குஜராத்: துறைமுகத்தில் காலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த சரக்கு கப்பல்

தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை என போலீஸ் சூப்பிரெண்டு பாகீர் சிங் ஜடேஜா செய்தியாளர்களிடம் கூறினார்.
வதோதரா,
குஜராத்தின் போர்பந்தர் நகரில் உள்ள போர்பந்தர் துறைமுகத்தில் கடலோரத்தில் நின்றிருந்த சரக்கு கப்பல் ஒன்றில் இன்று காலை திடீரென தீப்பிடித்து கொண்டது. கப்பலில் 15 பேர் இருந்துள்ளனர். அவர்கள் பயத்தில் அலறினார்கள்.
தீப்பிடித்த தகவல் அறிந்ததும் போலீசார் அந்த பகுதியில் அதிக அளவில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அவர்களுடைய வளையத்திற்குள் அந்த பகுதி கொண்டு வரப்பட்டது. மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கப்பலில் சிக்கியிருந்த 15 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை என போலீஸ் சூப்பிரெண்டு பாகீர் சிங் ஜடேஜா செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார். தீயை அணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story






