

ஆமதாபாத்,
குஜராத்தில் நகராட்சி தேர்தலுக்கான வாக்கு பதிவு வருகிற 21ந்தேதி நடைபெறுகிறது. அதன்பின் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வருகிற 23ந்தேதி நடைபெறும்.
தேர்தலை முன்னிட்டு வதோதரா பகுதியில் நிஜாம்புரா பகுதியில் நடந்த பிரசார பேரணியில் முதல் மந்திரி விஜய் ரூபானி கலந்து கொண்டார். அவர் மேடையிலேயே திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும், உடனடியாக அவரை மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். அவரது உடல்நலம் பற்றி துணை முதல் மந்திரி நிதின் பட்டேல் கூறும்பொழுது, ரூபானி உடல்நலமுடன் உள்ளார்.
அடுத்த 24 மணிநேரத்திற்கு அவர் மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைக்கப்படுவார். அவரது அனைத்து மருத்துவ பரிசோதனை அறிக்கைகளும் ரூபானி நலமுடன் உள்ளார் என தெரிவித்து உள்ளது என்று பட்டேல் கூறியுள்ளார்.