பெட்டி பெட்டியாக ரூபாய் நோட்டுகள்...! கையும் களவுமாக பிடித்த போலீஸ்..!

போலீசார் அந்த நோட்டுகளை பறிமுதல் செய்தபோது முதலில் அதை, `கள்ள நோட்டுகள்' என தவறுதலாக நினைத்து குழப்படமடைந்திருக்கின்றனர்.
பெட்டி பெட்டியாக ரூபாய் நோட்டுகள்...! கையும் களவுமாக பிடித்த போலீஸ்..!
Published on

அகமதாபாத்

குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கள்ள நோட்டு புழக்கம் அங்கு தீவிரமடைந்திருக்கிறது. இந்த நிலையில், பல கோடி போலி ரூபாய் நோட்டுகள் ஆம்புலன்ஸில் மறைத்துவைத்து கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, கண்காணிப்பைத் தீவிரப்படுத்திய போலீசார் வாகனச் சோதனையின்போது ஆம்புலன்ஸ் ஒன்றிலிருந்து ரூ.25.80 கோடி மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில், போலீசார் அந்த நோட்டுகளை பறிமுதல் செய்தபோது முதலில் அதை, `கள்ள நோட்டுகள்' என தவறுதலாக நினைத்து குழப்படமடைந்திருக்கின்றனர். பின்னர் அதில், `ரிவர்ஸ் பேங்க் ஆப் இந்தியா' எனக் குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டவர்கள், அது சினிமாவில் பயன்படுத்தப்படக்கூடியவை என்று தெளிவு பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com