60 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 12 வயது சிறுமி 5 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு..!

குஜராத்தில் 60 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 12 வயது சிறுமி 5 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டார்.
60 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 12 வயது சிறுமி 5 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு..!
Published on

சுரேந்திரநகர்,

குஜராத்தில் 60 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 12 வயது சிறுமி 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார்.

சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள கஜன்வாவ் கிராமத்தில் மனிஷா என்ற 12 வயது சிறுமி இன்று காலை 7.30 மணியளவில் 500 முதல் 700 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து அந்த பகுதியில் சிறுமியை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. மீட்பு பணியின் போது, சிறுமிக்கு ஆக்சிஜன் சப்ளை வழங்கப்பட்டது. சிறுமியின் உடல்நிலை கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் 60 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுமி, சுமார் ஐந்து மணிநேர போராட்டத்திற்குப் பிறகு மதியம் உள்ளூர் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் போலீசாரின் உதவியுடன் இராணுவ வீரர்களால் மீட்கப்பட்டார்.

இதையடுத்து சிறுமி, திரங்காத்ராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது சிறுமியின் உடல்நிலை சீராக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com