குஜராத் தேர்தல்: மாநகராட்சியை தொடர்ந்து நகராட்சி, பஞ்சாயத்துகளிலும் பா.ஜ.க அதிக இடங்களில் முன்னணி

குஜராத் உள்ளாட்சி தேர்தல்: மாநகராட்சியை தொடர்ந்து நகராட்சி, பஞ்சாயத்துகளிலும் பா.ஜ.க அதிக இடங்களிலும் முன்னணியி உள்ளது.
படம்: PTI
படம்: PTI
Published on

அகமதாபாத்

குஜராத் மாநிலத்தில் குஜராத்தின் 81 நகராட்சிகள், 31 மாவட்ட பஞ்சாயத்துகள் மற்றும் 231 தாலுகாக்களுக்கான தேர்தல் கடந்த மாதம் 21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

தற்போது வாக்குகளின் எண்ணிக்கை நடந்து வருகிறது. நகராட்சிகளி 58.82 சதவீத வாக்குகளைப் பதிவாகி உள்ளன.அதே நேரத்தில் மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு 65.80 ஆகவும், தாலுகா பஞ்சாயத்துகளுக்கு 66.60 சதவீதமாகவும் வாக்கு பதிவாகி உள்ளது.

இந்த தேர்தலில் 6 மாநகராட்சிகளிலும் மொத்தம் 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 6 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இறுதியாக முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மொத்தமுள்ள 576 வார்டுகளில் ஆளும் பா.ஜ.க. 483 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 55 வார்டுகளில் மட்டுமே வென்றுள்ளது. அசாதுதீனின் ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 7 வார்டுகளை கைபற்றியுள்ளது. ஆம் ஆத்மி 27 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

சூரத் மாநகராட்சியில் மொத்தமுள்ள 120 வார்டுகளில் 93 இடங்களில் பாஜக வெற்றி பெற்று உள்ளது.எதிர்க்கட்சியான காங்கிரஸ் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. முதன்முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி 27 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதனைத் தெடர்ந்து நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு பிப்ரவரி 28-ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

இதில் மொத்தமுள்ள 31 மாவட்ட பஞ்சாயத்துகளிலும் பாஜகவே முன்னிலை பெற்றுள்ளது. நகராட்சிகளை பொறுத்தவரையில் மொத்தமுள்ள 81 இடங்களில் 71 நகராட்சிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 5 நகராட்சிகளில் முன்னிலை பெற்றுள்ளது. மற்றவர்கள் 2 நகராட்சிகளில் முன்னிலை பெற்றுள்ளனர்.

தாலுகா பஞ்சாயத்துகளில் மொத்தமுள்ள 231 இடங்களில் பாஜக 185 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 34 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com