குஜராத் உள்ளாட்சி தேர்தல்: காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் முக்கிய ஆலோசனை

உள்ளாட்சி தேர்தலுக்கு கட்சி தயாராவது, அதற்கான செயல் திட்டங்கள் போன்ற விசயங்கள் பற்றி முக்கிய ஆலோசனை நடந்தது.

குஜராத் உள்ளாட்சி தேர்தல்:  காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் முக்கிய ஆலோசனை
Published on

புதுடெல்லி,

குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் இன்று நடந்தது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Also Read
ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவிலில் மார்ச் 3-ல் பொங்கல் விழா; 40 லட்சம் பெண்கள் வர வாய்ப்பு

குஜராத் உள்ளாட்சி தேர்தல்:  காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் முக்கிய ஆலோசனை

இதில் உள்ளாட்சி தேர்தலுக்கு கட்சி தயாராவது, அதற்கான செயல் திட்டங்கள் என்னென்ன என்பன போன்ற விசயங்களை பற்றி முக்கிய ஆலோசனை நடந்தது.

இதுபற்றி கூட்டத்திற்கு பின்னர், குஜராத் காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்டா நிருபர்களின் சந்திப்பில் இன்று கூறும்போது, அமைப்பு உருவாக்க பிரசாரத்திற்கு பின்னர், குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு உருவாக்கம் பற்றி ஒரு விரிவான மறுஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன்பின்னர் மாநிலத்தில் மாவட்ட அதிகாரிகள் நியமனம், பின்னர் மாவட்ட, மண்டல மற்றும் தாலுகா அளவிலான அமைப்பின் விரிவாக்கம் பற்றியும் மறுஆய்வு செய்யப்பட்டது என கூறினார். குஜராத்தில் இரட்டை என்ஜின் கொண்ட பா.ஜ.க. ஆட்சி உள்ளது. ஆனால், அதனை யாரும் கவனிக்கவில்லை என அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com