குஜராத்: நின்ற லாரி மீது மோதிய சொகுசு பஸ்; 6 பேர் பலி

சம்பவம் பற்றி அறிந்து ஜரோத் காவல் நிலைய போலீசார் உடனடியாக சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
குஜராத், விபத்து
Published on

வதோதரா

குஜராத்தின் சூரத் நகரில் இருந்து ராஜஸ்தான் நோக்கி சொகுசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, வதோதரா மாவட்டத்தில் வதோதரா-ஹலோல் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் கோதம்பி கிராமம் அருகே சென்றபோது, லாரி ஒன்றின் பின்பக்கத்தில் மோதியது.

விபத்து

அந்த லாரி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு, பழுது பார்க்கப்பட்டது. இந்த விபத்தில், பஸ்சின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள். 20 பேர் காயம் அடைந்தனர்.

சம்பவம் பற்றி அறிந்து ஜரோத் காவல் நிலைய போலீசார் உடனடியாக சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தேசிய பேரிடர் பொறுப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com