ராகுல் காந்தி குறித்து குஜராத் மந்திரி சர்ச்சை கருத்து - காங்கிரசார் கண்டனம்

ராகுல் காந்தி குறித்து குஜராத் மந்திரி தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு காங்கிரசார் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தி குறித்து குஜராத் மந்திரி சர்ச்சை கருத்து - காங்கிரசார் கண்டனம்
Published on

ஆமதாபாத்,

குஜராத் மாநில பா.ஜனதா மந்திரி கன்பத் வசவா நேற்று சூரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது, ராகுல் காந்தியை சிவனின் அவதாரம் என காங்கிரசார் அழைப்பதை கிண்டல் செய்து பேசினார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ராகுல் காந்தி சிவனின் ஒரு அவதாரம் என காங்கிரசார் கூறுகிறார்கள். மக்களை காப்பாற்ற சிவன் விஷம் அருந்தினார். அதைப்போல காங்கிரசாரும், ராகுல் காந்தியை லிட்டர் (500 மில்லி) விஷம் அருந்தச்செய்ய வேண்டும். அதில் அவர் உயிரோடு இருந்தால், ராகுல் காந்தி உண்மையிலேயே சிவனின் அவதாரம்தான் என நாங்கள் நம்புகிறோம் எனறு கூறினார்.

இது சர்ச்சையையும், எதிர்ப்பையும் கிளப்பி இருக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ராகுல் காந்தி பற்றிய இந்த கருத்து துரதிர்ஷ்டவசமானது என்று கூறிய குஜராத் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் தோஷி, இது பா.ஜனதாவின் உண்மையான குணநலன்களை காட்டுவதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com