குஜராத்தில் 4 நகரங்களில் மேலும் 15 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு

குஜராத்தில் அகமதாபாத் உள்ளிட்ட நான்கு பெரு நகரங்களில் இரவு நேர ஊரடங்கு மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் 4 நகரங்களில் மேலும் 15 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு
Published on

அகமதாபாத்,

குஜராத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள நான்கு நகரங்களான சூரத், அகமதாபாத், வதோதரா, ராஜ்கோட் ஆகிய பகுதிகளில் மேலும் 15 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல் மந்திரி விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

மேலும் ஊரடங்கை தளர்த்துவது தொடர்பான அறிவிப்பு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் விஜய் ரூபானி தெரிவித்தார். குஜராத்தில் தீபாவளிக்குப் பிறகு கொரோனா தொற்று பாதிப்பு திடீரென உயர்ந்ததால், கடந்த நவம்பர் 20 ஆம் தேதி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com