நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு குஜராத் பெரும் பங்கு வகித்தது: மத்திய மந்திரி அமித்ஷா

வருங்கால பொருளாதாரத்திற்கு செயற்கை நுண்ணறிவும், டீப் டெக்கும் முக்கிய தூண்களாக இருக்கும்.

நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு குஜராத் பெரும் பங்கு வகித்தது:  மத்திய மந்திரி அமித்ஷா
Published on

ஆமதாபாத்

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு குஜராத் பெரும் பங்கு வகித்தது என கூறினார்.

தொழில் துறையில் வளரச்சி கண்ட பல மாநிலங்கள் நாட்டில் உள்ளன. அவற்றின் முதல்-மந்திரிகள் மற்றும் தொழில் அதிபர்களுடன் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. ஆனால், குஜராத் தவிர வேறெந்த பகுதியிலும் இதுபோன்று கட்டமைக்கப்பட்ட தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை என என்னால் நம்பிக்கையுடன் கூற முடியும் என்றார்.

வருங்கால பொருளாதாரத்திற்கு செயற்கை நுண்ணறிவும், டீப் டெக்கும் முக்கிய தூண்களாக இருக்கும். பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையின் கீழ், உலகின் வளர்ச்சி பெற்று வரும் துறைகளில் தலைமை வகிக்கும் வகையில், இந்தியா வளர்ச்சி பெற்று வருகிறது.

அடுத்த 25 ஆண்டுகளில், உலக பொருளாதாரத்தை வடிவமைக்கும் அந்த அனைத்து துறைகளிலும், தன்னுடைய வலிமையான இருப்பை ஒரு நிறுவனராக இருந்து இந்தியா இன்று நிறுவி வருகிறது என்று அமித்ஷா பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com