குஜராத்; பைக்கில் அமர விடாத நபர்... அடித்து, உதைத்த இளம்பெண்

போக்குவரத்து துறை காவல் அதிகாரி ஒருவர் தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு சென்றதும், அந்த பெண் தப்பியோடி விட்டார்.
குஜராத்; பைக்கில் அமர விடாத நபர்... அடித்து, உதைத்த இளம்பெண்
Published on

வதோதரா,

குஜராத்தின் வதோதரா நகரில் சாயாஜி கஞ்ச் பகுதியில், மக்கள் கூட்டம் நிறைந்த இடத்தில் நபர் ஒருவரை, இளம்பெண் ஒருவர், பலமுறை அடித்தும், உதைத்தும் உள்ளார். சுற்றியிருப்பவர்கள் அதனை தொடர்ந்து வேடிக்கை பார்த்தபடி இருந்தனர். இந்த வீடியோ, வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், இளம்பெண் ஒருவர் நபரின் சட்டை காலரை பிடித்து, அவரை தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். இதன் பின்னர், அந்நபரை ஆறேழு முறை உதைக்கிறார். அடிக்கவும் செய்கிறார்.

ஆனால், அவரை தள்ளி விட அந்நபர் முயற்சிக்கிறார். தொடர்ந்து இளம்பெண், தலை முடியை பிடித்து இழுத்து, அந்நபரை தாக்குகிறார். பைக்கை தரையில் தள்ளி விட்டார். எனினும், பெரிய கல் ஒன்றை எடுத்து பைக்கின் மீது வீச முயன்றபோது, அவரை அந்நபர் தடுத்து விட்டார்.

அந்த பகுதியில், தொலைபேசியில் பேசி கொண்டிருந்த மற்றொரு நபரையும் அந்த பெண் திட்டுகிறார். எதற்காக அவர் அப்படி நடந்து கொள்கிறார்? என்று சுற்றி இருப்பவர்களுக்கு தெரிய வரவில்லை. ஆனால், அந்நபரின் பைக்கில் உட்கார விடாததற்காக, கடுமையாக தாக்கியுள்ளார்.

இதன்பின்னர், தகவல் அறிந்து போக்குவரத்து துறை காவல் அதிகாரி ஒருவர் சம்பவ பகுதிக்கு சென்றார். இதனை பார்த்ததும் அந்த பெண் தப்பியோடி விட்டார். அந்த பெண்ணுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com