இந்தியாவில் முதல்முறையாக துவாரகாவில் சுற்றுலாப் பயணிகளுக்காக நீர்மூழ்கிக் கப்பல் சேவை அறிமுகம்..!

ஒவ்வொரு நீர்மூழ்கிக் கப்பலும் 24 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

துவாரகா,

கடலுக்கு அடியில் தொலைந்துவிட்டதாக நம்பப்படும் பழங்கால நகரமான துவாரகாவில் குஜராத் அரசு, சுற்றுலாப் பயணிகளுக்காக நீர்மூழ்கிக் கப்பல் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. 'இந்துக் கடவுளான கிருஷ்ணரின் நகரம்' என்று அழைக்கப்படும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட துவாரகாவில் இந்தியாவிலேயே முதல் முறையாக நீருக்கடியில் செய்யப்படும் சுற்றுலா வசதி இதுவாகும்.

தற்போதைய திட்டத்தின்படி, 2024 அக்டோபரில் தீபாவளிக்கு முன்னதாக இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு இலக்கு வைத்துள்ளது. இத்திட்டத்தின்படி, கடலுக்கு அடியில் 100 மீட்டர் தூரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் நீர்மூழ்கிக் கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டு, நீருக்கடியில் உள்ள கடல்வாழ் உயிரினங்களைப் பார்ப்பார்கள்.

ஒவ்வொரு நீர்மூழ்கிக் கப்பலும் 24 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும். மேலும் இந்த கப்பல் இரண்டு அனுபவம் வாய்ந்த பைலட்கள் மற்றும் ஒரு தொழில்முறை பணியாளரால் வழிநடத்தப்படும். அனைத்து பயணிகளுக்கும் ஜன்னல் பார்வையை வழங்கும் வகையில் கப்பல் வடிவமைக்கப்படும்.

ஒவ்வொரு நாளும் ஏராளமான மக்களை ஈர்க்கும் நாட்டின் முக்கிய கோவில் நகரங்களில் ஒன்றான துவாரகாவின் சுற்றுலா வாய்ப்புகளை நீர்மூழ்கிக் கப்பல் வசதி அதிகரிக்கும் என்று அரசு நம்புகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com