கைதிகள் இருந்த லாக்-அப் முன் சாதாரண உடையில் குத்தாட்டம் போட்ட பெண் போலீஸ் சஸ்பெண்ட்

கைதிகள் இருந்த லாக்-அப் முன் சாதாரண உடையில் குத்தாட்டம் போட்ட பெண் போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
கைதிகள் இருந்த லாக்-அப் முன் சாதாரண உடையில் குத்தாட்டம் போட்ட பெண் போலீஸ் சஸ்பெண்ட்
Published on

அகமதாபாத்,

காவல்நிலையத்தில் நடனமாடிய பெண் காவலரின் டிக் டாக் வீடியோ வைரல் ஆனதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவர் மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியான ஒரு வீடியோவில் குஜராத்தை சேர்ந்த அர்பிதா சவுத்ரி என்ற பெண் காவலர் மெஹ்சானா காவல்நிலையத்திற்குள் சாதாரண உடை அணிந்து நடனமாடுவது பதிவாகியிருந்தது.

குற்றவாளிகள் அடைத்து வைத்திருக்கப்படும் காவல் நிலையத்தில் சமூகப் பொறுப்பில்லாமல் நடனமாடிய பெண் போலீசுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

2016-ம் ஆண்டில் காவல்துறையின் லோக் ரக்ஷக் தளத்திற்கு தேர்வான அர்பிதா சவுத்ரி 2018-ம் ஆண்டில் மெஹ்சானாவுக்கு மாற்றப்பட்டார் என்று துணை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, டெல்லியில் டி.டி.சி பஸ்ஸில் டிக்-டாக்கிற்கு நடனமாடிய ஒரு பெண்ணின் வீடியோ வைரலானது. இதைத் தொடர்ந்து பஸ் டிரைவர், மார்ஷல் மற்றும் நடத்துனர் சஸ்பெண்ட் செய்யபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com