குஜராத்: ஆழ்துளை கிணற்றில் இருந்து 33 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு

ஆழ்துளை கிணற்றில் இருந்து 33 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட இளம்பெண் உயிரிழந்தார்.
குஜராத்: ஆழ்துளை கிணற்றில் இருந்து 33 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு
Published on

காந்திநகர்,

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள கண்டேராய் என்ற கிராமத்தில் நேற்று காலை 6.30 மணியளவில், 18 வயது இளம்பெண் ஒருவர் சுமார் 540 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.

இது குறித்து தகவலறிந்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இளம்பெண்ணை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த பெண் சுமார் 490 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டு இருப்பது தெரியவந்த நிலையில், ஆழ்துளை கிணற்றின் அகலம் வெறும் ஒரு அடி மட்டுமே என்பதால் அந்த பெண்ணை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

இந்த மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், எல்லை பாதுகாப்பு படையினர், தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். நவீன தொழில்நுட்ப உபகரணங்களின் உதவியுடன் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 33 மணி நேரம் மீட்பு பணி நீடித்த நிலையில், இன்று மாலை 4 மணியளவில் இளம்பெண் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com