

ஸ்ரீநகர்,
காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் நேற்று அதிகாலை ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர்.
சுதாரித்துக்கொண்ட ராணுவ வீரர்கள் தங்களுடைய துப்பாக்கிகளால் அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் ராணுவ வீரர் ஒருவரின் உடலை துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையில் ராணுவ வீரர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை பிடிப்பதற்காக அங்கு கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.